ஆசிய றக்பி செவன்ஸில் தொடரின் கிண்ணத்தை வென்றது ஹொங்கொங்!

Monday, October 17th, 2016
இலங்­கையில் நடை­பெற்ற ஆசிய றக்பி செவன்ஸ் இறு­திப்­போட்­டியில் தென் ­கொ­ரி­யாவை வீழ்த்தி ஹொங் கொங் அணி 2016ஆம் ஆண்­டுக்­கான சம்­பியன் பட்­டத்தை வென்­றுள்ளதுடன் பெண்களுக்கான போட்­டியில் ஜப்பான் மகுடத்தை சூடிக்கொண்டது.
நேற்று நடை­பெற்ற இறு­திப்­போட்­டியில் விசேட அதி­தி­க­ளாக விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயாசிறி ஜய­சே­கர, அமைச்­சர்­க­ளான மலிக் சம­ர­விக்­கி­ரம, ஹரீன் பெர்­னாண்டோ மற்றும் ஆசிய றக்பி சங்கத் தலைவர் மற்றும் அனு­ச­ரணை வழங்கும் டயலொக் நிறு­வ­னத்தின் பிரதமநிறைவேற்று அதி­காரி ஹான்ஸ்விஜே­சூ­ரிய ஆகியோர் கலந்து ­கொண்­டனர்.கொழும்பு குதிரைப் பந்­தயத் திடல் மைதா­னத்தில் கடந்த இரண்டு நாட்­க­ளாக நடை­பெற்­று­வந்த ஆசிய றக்பி செவன்ஸ் போட்டித் தொடரின் முதல் சுற்றுப் போட்­டிகள் கடந்த சனிக்­கி­ழமை நிறை­வ­டைந்த நிலையில் நேற்று அரை­யி­றுதிப் போட்­டிகள் ஆரம்­ப­மா­யின. இதில் தர­வ­ரி­சையில் முத­லி­டத்திலுள்ள ஹொங்­கொங்கும் இரண்­டா­மி­டத்தில் உள்ள இலங்கை அணி­யும் மோதின. இந்தப் போட்­டியில் ஆரம்பம் முதலே இரு அணி­களும் சம­ப­லத்­துடன் ஆடி­வர முதல் பாதி ஆட்டம் 7-–7 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் சம­நி­லையில் முடி­வுக்கு வந்­தது.

Cu5a9RzXEAArJyF

அதன் பிறகு சிறப்­பாக ஆடிய ஹொங்கொங் அணி போட்­டியை தம் பக்கம் திருப்­பிக்­கொண்­டது. இறு­தியில் இலங்கை அணி 7–19 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் தோல்­வி­ய­டைந்து போட்­டி­யி­லி­ருந்து வெளி­யே­றி­யது.
இரண்­டா­வது அரை­யி­றுதிப் போட்­டியில் தென்­கொ­ரியா மற்றும் சீன அணிகள் மோதின. இந்தப் போட்­டியில் 19-–14 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் தென்­கொ­ரியா வெற்­றி­பெற்­றது.இறு­திப்­போட்­டியில் தென்­கொ­ரியா – ஹொங்கொங் அணிகள் பலப்­ப­ரீட்சை நடத்­தின. இதில் 24–-19 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் ஹொங்கொங் அணி வெற்­றி­பெற்று 2016ஆம் ஆண்டுக்கான ஆசிய றக்பி செவன்ஸ் சம்பியனாக முடிசூடிக்கொண்டது.
பெண்கள் பிரிவில் சீனாவை 17–-5 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி ஜப்பான் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

Cu5fVi4WIAAkcF6

Related posts: