ஆசிய தடகள போட்டியில் இந்துனில்லுக்கு முதலிடம்!

Thursday, April 27th, 2017

சீனாவில் நடை­பெற்­று­வரும் ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் தடகளப் போட்­டி­களில் முதலாம் கட்­டத்தில் இலங்கை வீரர் இந்­துனில் ஹேரத் முதலிடத்தை வென்று சாதித்­துள்ளார்.

இவர் 800 மீற்றர் ஓட்டப் போட்­டியில் கலந்­து­கொண்டே குறித்த வெற்­றியைப் பதி­வு­செய்­துள்ளார். அவர் பந்­தயத் தூரத்தை 1.50 நிமிடம் 69 செக்­கன்­களில் ஓடி முடித்து முதலிடத்தை வென்­றுள்ளார்.

அதேபோல் தெற்­கா­சி­யாவின் அதி­வேக வீர­ரான இலங்­கையின் ஹிமேஷ எஷான் ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் போட்­டியில் இரண்­டா­மி­டத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்­கத்தை வென்றார்.  100 மீற்றர் ஓட்டப் போட்­டியில் அண்­மைக்­கா­லங்­களில் சிறப்­பாக செயற்­பட்ட ஹிமேஷ எஷான் பந்­தயத் தூரத்தை 10.43 செக்­கன்­களில் ஓடி முடித்­துள்ளார். முதல் கட்டப் போட்­டி­களில் பங்குப்பற்றிய கயந்­திகா 800 மீற்றர் ஓட்டப் போட்­டியில் பந்­தயத் தூரத்தை 2.3.78 நிமி­டங்­களில் ஓடி முடித்து மூன்­றா­மி­டத்தைப் பெற்றார்.

சீனாவில் நடை­பெற்­று­வரும் கிராண்ட் பிரிக்ஸ் முதலாம் கட்ட மெய்­வல்­லுநர் போட்­டி­களில் இலங்கை சார்­பாக 11 வீரர்கள் கலந்­து­கொண்­டுள்­ளனர். 11 பேரில் 6 வீரர்­க­ளுடன் 5 வீராங்­க­னைகள் கலந்­து­கொண்­டுள்­ளனர். முதலாம் கட்ட மெய்­வல்­லுநர் போட்­டிகள் நேற்று முன்­தினம் ஆரம்­ப­மா­யின. டெங்கு காய்ச்­சலால் பாதிக்­கப்­பட்ட உயரம் பாய்தல் வீரர் மஞ்­சுள குமார, கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­வதால் அவர் இந்த போட்­டிகளில் கலந்து கொள்­ள­வில்லை என அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதே­வேளை ஒலிம்பிக் வீரர் சுமேத ரண­சிங்க, வருண லக்ஷான் ஆகிய இரு­வரும் ஆண்­க­ளுக்­கான ஈட்டி எறிதல் போட்­டி­களில் கலந்து கொள்­கின்­றனர். மேலும் இலங்கை சாதனை நாயகி கயந்திகா அபேரட்ன, நிமாலி லியனாராச்சி ஆகிய இருவரும் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: