ஆசிய டென்னிஸ் சம்மேளனம்: முக்கிய பதவியில் இலங்கையர்!

Tuesday, December 5th, 2017

ஆசிய டென்னிஸ் சம்மேளனத்தின் உதவித் தலைவராக இலங்கையைச் சேர்ந்த சுரேஷ் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டார்.

இந்த பதவியைப் பெறும் முதலாவது இலங்கையரும் அவராவார்.

ஏற்கனவே அவர் இந்த சம்மேளனத்தின் பொதுசெயலாளராக கடந்த 2005ம் ஆண்டு முதல் பதவி வகித்துள்ளார்.

2002ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையில் போட்டியின்றி இலங்கையின் டென்னிஸ் ஒழுங்கமைக்கு தலைவராக அவர் செயற்பட்டு வந்துள்ளார்.

25 நாடுகளின் அங்கத்துவத்தைக் கொண்டுள்ள ஆசிய டென்னிஸ் சம்மேளனம், வருடாந்தம் 60க்கும் அதிகமான டென்னிஸ் தொடர்களை நடத்துகிறது.

Related posts: