ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி !

Monday, October 8th, 2018

19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றிப்பெற்றது.

8 அணிகள் இடையிலான 5வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில் இடம்பெற்று வருகிறது.

இந்தநிலையில் டாக்காவில் நேற்று நடை பெற்ற இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற இந்திய அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இந்தியா 304 ஓட்டங்கள் பெற்றது.

இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வல் அனுஜ் பிரப் சிம்ரன் சிங் ஆயுஷ் படோனி ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

இதனையடுத்து 305 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி இறுதியில் 160 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய தியாகி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் இந்தியா 144 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.