ஆசிய கிண்ண கிரிக்கட் தொடர் இலங்கையில்?

Saturday, June 13th, 2020

இம்முறை ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என Cricinfo இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இம்முறை குறித்த தொடரை பாகிஸ்தான் நடத்தவிருந்த நிலையில், அந்தத் தொடரை இலங்கையில் நடத்துவதற்கு அந்நாட்டு கிரிக்கட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளதன் காரணமாக ஆசிய கிண்ண தொடர் இலங்கையில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

அதன்படி, குறித்த தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கையில் நடைபெறும் என குறித்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

இத்தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றால் இந்திய அணி பங்கேற்காது என்பதோடு கொவிட் 19 கட்டுப்பாடு இலங்கையில் சிறப்பாக உள்ளதன் காரணமாக ஆசிய கிண்ண கிரிக்கட் தொடர் இலங்கையில் நடத்தப்பட வாய்ப்புகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: