ஆசிய கிண்ணம் – இலங்கையை தோற்கடித்து கிண்ணத்தை வென்ற இந்தியா!

Wednesday, September 12th, 2018

இந்தியா ஆசிய கிண்ண வரலாற்றில் இதுவரை ஆறு முறை கிண்ணத்தை கைப்பற்றியுள்ளதோடு, அதிக முறை ஆசிய கிண்ணத்தை வென்ற அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இது வரை நடந்துள்ள 13 ஆசிய கிண்ண தொடர்களில் எட்டு முறை இறுதிப் போட்டி வரை சென்றுள்ளது இந்தியா.

கடந்த ஆசிய கிண்ணத்தை வென்ற நாடும் இந்தியா தான்.

இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் இலங்கை உள்ள நிலையில், அந்த அணி இதுவரை ஐந்து முறை ஆசிய கிண்ணத்தை வென்றுள்ளது.

இலங்கையை 80 மற்றும் 90களில் மூன்று முறை இறுதிப் போட்டிகளில் இந்தியா புரட்டி எடுத்து, ஆசிய கிண்ணத்தை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.