ஆசியக் கிண்ணக் கிரிக்கட் தொடர் இன்று ஆரம்பம் – முதல் போட்டியில் பல்லேகலையில் நாளை பங்களதேஷீடன் மோதுகின்றது இலங்கை!
Wednesday, August 30th, 20232023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்த ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ளன.
இதன்படி, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள தொடரின் முதல் போட்டி, பாகிஸ்தானின் முல்தான் மைதானத்தில், இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இன்றுமுதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் பங்குபற்றுகின்றன.
நேபாளம் கிரிக்கட் அணி முதல் முறையாக ஆசிய கிண்ண கிரிக்கட் தொடருக்கு தெரிவாகியுள்ளது. இதேவேளை, இலங்கை அணி பங்குபற்றும் முதலாவது போட்டி, நாளை பல்லேகலையில் இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில் பங்களாதேஷ் அணியை, இலங்கை அணி எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|