ஆசியகிண்ண கால்பந்து தொடரில் தகுதிச்சுற்றில் மியன்மாரை வீழ்த்தியது இந்தியா!

Wednesday, March 29th, 2017

மியன்மாரின் யங்கூன் நகரில் நடைபெற்றுவரும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் 2019 ஆசிய கிண்ண கால்பந்து தொடரின் தகுதி சுற்றில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் மியான்மரை வீழ்த்தியுள்ளது.

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. அதன்படி, ஆட்டம் சமநிலை அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் சுனில் ஷேத்ரி கோல் அடித்து அசத்தினார்.

இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3 புள்ளிகளை பெற்றது. ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய அணி தனது அடுத்த ஆட்டங்களில் கிர்கிஸ்தான் மற்றும் மக்காவு ஆகிய அணிகளுடன் மோதவுள்ளது.

Related posts: