அஸ்வின் என்ன  சாதனை படைத்தார் – ஆஸி வீரர் வோர்ணர்!

Sunday, March 12th, 2017

அவுஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரரான வார்னர் அஸ்வினின் சாதனைகளை ஜீரணிக்க முடியாதது போல் பல்வேறு வீரர்களின் சாதனைகளை எடுத்துக் கூறியுள்ளார்.

ஐதராபாத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது முஸ்தபிகுர்ரஹ்மான் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தியவர் என்ற சாதனை படைத்தார்.

இதை அவர் 45 டெஸ்ட் போட்டிகளில் செய்து அசத்தினார். இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர் வார்னர் கூறுகையில், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஸ்டைன் 9,579 பந்துகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ஆனால் அஸ்வினோ ஸ்டைனை விட 550 ஓவர்கள் அதிகமாக வீசி தான் இச்சாதனையை படைத்துள்ளார்.

மேலும் வக்கார் யூனுஸ், முரளிதரன், லில்லி, வார்னே, மெக்ரத், மிட்ச்செல் ஜான்சன் ஆகியோர் குறைந்த பந்துகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

அஸ்வின் இச்சாதனையை 5 ஆண்டுகள் 3 மாதங்களில் செய்துள்ளார். ஆனால் இங்கிலாந்தின் கிரீம் ஸ்வான் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குள் 250 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இவர்களுடன் ஒப்பிடும் போது அஸ்வினின் சாதனை ஒட்டுமொத்தமாக 20 பேரின் சாதனைகளை விட கீழாகவே உள்ளது என வார்னர் கூறியுள்ளார்.

Related posts: