அஸ்வினுக்கு ஓய்வு!

Wednesday, January 25th, 2017

இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை தகவல் வெளியிட்டுள்ளது.அவர்களுக்குப் பதிலாக பர்வீஸ் ரசூல், அமித் மிஸ்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தேர்வுக் குழுவும், இந்திய அணி நிர்வாகமும் கலந்தாலோசித்த பின்னர் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வளிப்பது என முடிவெடுக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நாளை கான்பூரிலும், 2ஆவது ஆட்டம் 29ஆம் திகதி நாகபுரியிலும், 3ஆவது ஆட்டம் பெப்ரவரி 1ஆம் திகதி பெங்களுரிலும் நடைபெறுகின்றன.

அணி விபரம்: கே.எல். ராகுல், மன்தீப் சிங், விராட் கோலி (தலைவர்), எம்.எஸ். தோனி (விக்கெட் காப்பாளர்), யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரிஷப் பந்த் (விக்கெட் காப்பாளர்), ஹார்திக் பாண்டியா, அமித் மிஸ்ரா, பர்வீஸ் ரசூல், யுவேந்திர சாஹல், மணீஷ் பாண்டே, ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஸ்வர் குமார், ஆசிஷ் நெஹ்ரா.

coltkn-01-25-fr-08162421183_5175959_24012017_MSS_CMY

Related posts: