அஸிக்கு பயிற்சியளிக்கும் முரளி!

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி, தங்களது ஆரம்ப கட்ட பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்த அணிக்கு ஆலோசனைகளையும், பயிற்சிகளையும் வழங்குவதற்காக இலங்கையின் முன்னாள் வீரர்கள் இருவர் அணுகப்பட்டுள்ளனர். துடுப்பாட்ட பயிற்சியாளராக திலான் சமரவீரவும், பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் சூழல் பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கிரிக்கெட் அவுஸ்திரேலிய இணையத்தளத்துக்கு முரளி தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். எந்தவொரு வீரருக்கும், எந்தவொரு அணிக்கும் அனுபவங்களையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்வதில் தப்பேதும் கிடையாது எனவும் முரளி குறிப்பிட்டார்.
நான் அணியிலிருந்து ஓய்வை அறிவித்து 6 ஆண்டுகள் ஆகிறது, அதன் பின்னர் அதிக காலம் இந்தியாவில் IPL அணிகளோடு பயணித்தேன் இப்போது, அவுஸ்திரேலிய வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்க கிடைத்திருப்பதாகவும் முரளி கருத்துரைத்தார்.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான தொடரின் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. டெஸ்ட் தொடரை கைப்பற்றும் வாய்ப்பு அதிகமாக அவுஸ்திரேலியா அணிக்கே இருப்பதாகவும் முரளி குறிப்பிட்டுள்ளார்
Related posts:
|
|