அவுஸ்திலேலிய வீரர்களுக்கு எச்சரிக்கை!

Tuesday, February 21st, 2017

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியை சீண்ட வேண்டாம் என அவுஸ்திரேலிய நட்சத்திர வீரர் டேவிட் வார்னர், தனது அணியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி இந்தியாவுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதன் முதல் போட்டி வரும் 23ஆம் தேதி புனேவில் நடைபெற உள்ளது.

முன்னதாக அவுஸ்திரேலிய அணித்தலைவர் கூறியதாவது, களத்தில் கோஹ்லியை சீண்டி அவரது விக்கெட்டை கைப்பற்றுவோம் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர், இந்தியா வந்தது கிரிக்கெட் விளையாட மட்டும் தான். கோஹ்லியையோ வேறு யாரையோ வம்பிழுக்க கிடையாது. அதனால் கோஹ்லியை சீண்டும் எண்ணம் எனக்கோ,எனது அணிக்கோ சுத்தமாக கிடையாது.

திறமையாக செயல்பட்டு போட்டியில் வெற்றி பெறுவதே எங்களின் முதல் இலக்கு என தெரிவித்துள்ளார்.

c9bfcce3-ce8e-4b74-90bd-87af4e474571_S_secvpf.gif-415x260

Related posts: