அவுஸ்திரேலிய வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பில் சச்சின் கருத்து!

Friday, March 30th, 2018

அவுஸ்திரேலிய அணி வீரர்கள் பந்தினைச் சேதப்படுத்திய குற்றத்துக்காக விதிக்கப்பட்டுள்ள தடைகளை தாம் வரவேற்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

அவர் தமது டுவிட்டர் பதிவு ஒன்றில் இதனைக் கூறியுள்ளார்.

குறித்த குற்றத்துக்காக அவுஸ்திரேலிய அணித் தலைவராக இருந்த ஸ்டீவன் சுமித் மற்றும் உதவித் தலைவர் டேவிட் வோர்னர் ஆகியோருக்கு தலா 12 மாதங்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கெமரன் பென்க்ராஃப்ட்டுக்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை தாம் வரவேற்பதாகவும், கிரிக்கட்டின் கனவான் தன்மை பாதுகாக்கப்படவேண்டும் என்றும் சச்சின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2001ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியொன்றில், பந்தினை சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: