அவுஸ்திரேலிய லெஜன்ட்ஸுக்கு வெற்றி!

Wednesday, September 21st, 2022

சாலை பாதுகாப்பு உலக செம்பியன்ஸிப் தொடரின் பங்களாதேஸ் லெஜன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவுஸ்திரேலிய லெஜன்ட்ஸ் அணி 3 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய லெஜன்ட்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய பங்களாதேஸ் லெஜன்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில், 159 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய அவுஸ்திரேலிய லெஜன்ட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து போட்டியின் வெற்றியிலக்கை அடைந்தது.

000

Related posts: