அவுஸ்திரேலிய கிரிக்கட் சபையே தீர்மானிக்க வேண்டும் – சச்சின் டெண்டுல்கர்!

Wednesday, June 17th, 2020

தற்போதைய சூழ்நிலையில் இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கட் போட்டி தொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கட் சபையே தீர்மானிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 16 அணிகள் பங்கேற்கும் 7 ஆவது இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கட் போட்டி அக்டோபர மாதம் 18 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் அவுஸ்திரேலியாவில் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக அங்குஇந்த போட்டி; நடப்பதில் தொடர்ந்தும் சந்தேகம் நிலவி வருகிறது.

இந்தநிலையில் இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கட் போட்டியை நடத்த முடியுமா? இல்லையா? என்பது தொடர்பில் அவுஸ்திரேலியாவே தீர்மானிக்க வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நிதி நிலைமை உள்ளிட்ட பல முக்கிய விடயங்களையும்; இதன்போது பரிசீலிக்க வேண்டியது அவசியமாகும். எனவே இதில் தீர்மானத்தை மேற்கொள்வது கடினமாகவே உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ரசிகர்கள் இன்றி போட்டியை நடத்துவது சிறப்பாக அமையாது என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்

Related posts: