அவுஸ்திரேலிய கிரிகெட்டில் இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்!

Wednesday, July 13th, 2016

அவுஸ்திரேலியாவுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் புகலிடம்கோரிச் சென்ற யுகேந்திரன் சின்னவைரன் என்ற 25 வயதான இலங்கையர் அங்கு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவருகின்றார்..

சகலத்துறை ஆட்டக்காரரான யுகேந்திரன் இலங்கையின் 19 வயதிற்குட்பட்ட இலகுப் பந்துஅணியில் 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் விளையாடியுள்ளார். அத்துடன், 2010ஆம் ஆண்டு 22 வயதுக்குட்பட்ட அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தி யுகேந்திரன் விளையாடியுள்ளார்.

கிரிக்கெட் மீது தீவிர காதல் கொண்ட யுகேந்திரன் அவுஸ்திரேலியாவிற்கு சென்றும் தமது விளையாட்டை கைவிடவில்லை.

அவுஸ்திரேலியாவின் டீ அணியில் விளையாடி வரும் இவர் கடந்த 10ஆம் திகதி அங்கு இடம்பெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி இரட்டை சதம் பெற்றுள்ளார். இவ்வாறு கிரிக்கெட்டில் தமது திறமையை வெளிக்காட்டிய முதலாவது புகலிக்கோரிக்கையாளர் என்ற பெயருக்கும் யுகேந்திரன் உரித்துடையவராகியுள்ளார்.

அத்துடன் யுகேந்திரன் நடந்து முடிந்த 40 ஓவர்கள் கொண்ட குறித்த போட்டியில் ட்ரேசி வில்லேஜ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வருகின்றார்.இந்த போட்டியில், அவர், 18 ஆறு ஓட்டங்களையும், 14 நான்கு ஓட்டங்களையும் பெற்று மொத்தமாக 227 ஓட்டங்களுக்கு பெற்றிருந்தார்.இதேவேளை ‘கிரிக்கெட் எனது உயிர். நான் எனது வாழ்க்கையில் கிரிக்கெட்டுக்காக அனைத்தையும் தியாகம் செய்வேன் என யுகேந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், அவுஸ்திரேலிய அணியில் விளையாட கிடைத்தமை சிறந்த அனுபவம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவரது குடும்பமும், அவரது உறவினர்கள் சிலரும் தற்போதும் சிலாபம் நகருக்கு அண்மையில் உள்ள உடப்பு மீனவக் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

Related posts: