அவுஸ்திரேலிய கனவு அணியில் ரங்கன ஹேரத்துக்கு இடம்!

Sunday, December 25th, 2016

அவுஸ்திரேலியா சார்பில் தேர்வு செய்யப்பட்ட “கனவு” டெஸ்ட் அணிக்கு இந்திய வீரர் விராட் கோஹ்லி தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த அணியில்  இலங்கை அணியின் சிரேஸ்ர வீரர்  ரங்கன ஹேரத்தும் இடம்பிடித்துள்ளார்.

ஐசிசி நிர்ணயித்த காலத்தில் கோஹ்லி 451 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனால் அவருக்கு இடமில்லை என்று கூறப்பட்டது.

இதனிடையே அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த ஆண்டுக்கான “கனவு” டெஸ்ட் அணியை வெளியிட்டுள்ளது. இதில் கோஹ்லி தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2016ல் இந்திய அணியை கோஹ்லி தொடர்ந்து வெற்றி பெறச் செய்து வருகிறார். இதனால் எங்கள் அணிக்கு கோஹ்லி தான் தலைவர் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் கனவு டெஸ்ட் அணி

கோஹ்லி (அணித்தலைவர்), அசார் அலி, ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவ், குயின்டன் டி காக், ரபாடா, அஸ்வின், ஹேரத்

625.500.560.350.160.300.053.800.900.160.90

Related posts: