அவுஸ்திரேலிய அணி 20 ஓட்டங்களால் வெற்றி!

Saturday, February 12th, 2022

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக, பென் மெக்டெர்மொட் 53 ஓட்டங்களையும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 38 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

150 என்ற வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி துடுப்பெடுத்தாடிய பொழுது மழை குறுக்கிட்டதால் டக்வத் லூயிஸ் முறைமைக்கு அமைய போட்டி 19 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டதுடன், இலங்கை அணியின் வெற்றி இலக்கு 143 ஆக குறைக்கப்பட்டது.

எனினும், இலங்கை அணி வீரர்கள் துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறியதால் 19 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற இலங்கை அணி தோல்வியை தழுவியது.

அணிசார்பில் அதிகபடியாக, பெத்தும் நிஸ்ஸங்க 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசில்வுட் 12 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதற்கமைய, அவுஸ்திரேலிய அணி 1 – 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.

000

Related posts: