அவுஸ்திரேலிய அணி வீரர்கள் மீது தாக்கதல்!

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2) Wednesday, October 11th, 2017

இரண்டாவது T-20 போட்டி முடிவடைந்த பின்னர் விடுதிக்கு திரும்பிய அவுஸ்திரேலிய வீரர்களின் பேருந்து தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள பாரஸ்பரா மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து விடுதிக்கு திரும்பும் நிலையில் அவர்கள் பயணித்த பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்கள் வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் பேருந்தின் கண்ணாடியில் ஒன்று உடைந்துள்ளது. எதிர்பார்க்காத தாக்குதலை அடுத்து அவுஸ்திரேலிய வீரர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.