அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் விலகல்!
Monday, April 2nd, 2018
2018ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் ரூ. 9.40 கோடிக்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஏலத்தில் வாங்கிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் குறித்த ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தென்னாபிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டிலிருந்து விலகியுள்ள ஸ்டார்க், ஐபிஎல் போட்டியிலிருந்தும் விலகியுள்ளார்.
இந்த முடிவு, கொல்கத்தா அணிக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. எனினும் ஐபிஎல் போட்டியிலிருந்து மூன்றாவது வருடமாக பங்கேற்காமல் உள்ளார் ஸ்டார்க்.
கிறிஸ் லின், ஆண்ட்ரே ரஸல் ஆகிய வீரர்கள் ஏற்கெனவே காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 498 ஓட்டங்கள்
எங்களுக்கு வெற்றி தான் - இலங்கை அணி தலைவர்
இலங்கை கிரிக்கட் அணியினர் மகிழ்ச்சியில்!
|
|