அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளராக ஹரிஸ்!
Sunday, September 4th, 2016
அவுஸ்திரேலிய அணியின், தென்னாபிரிக்காவுக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் றயான் ஹரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஹரிஸ், தலைமைப் பயிற்றுவிப்பாளர் டரன் லீமன், உதவிப் பயிற்றுவிப்பாளர் டேவிட் ஸாகர் ஆகியோரைக் கொண்ட அவுஸ்திரேலியாவின் பயிற்றுவிப்பாளர் குழாமுடன் இணையவுள்ளார்.
கடந்தாண்டு ஜூலையில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஹரிஸ், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இந்தியா “ஏ” அணிகளை உள்ளடக்கி, தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் முத்தரப்புத் தொடரில், தேசிய செயல்திறன் குழாமின் உதவிப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகிறார். இது தவிர, கடந்த பருவ காலத்தில், 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அவுஸ்திரேலியா பதினொருவர் அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்தார்.
தனது விளையாடும் காலங்களில், காயங்களினால் அவதிப்பட்ட ஹரிஸ், வலது முழங்கால் காயத்தால், 35 வயதில் ஓய்வு பெற்றிருந்தார், ஹரிஸ், 27, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 113 விக்கெட்டுக்களை கைப்பற்றியதோடு, 21, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 44 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
Related posts:
|
|