அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக கிரேம் ஹிக்!
Friday, September 16th, 2016
ஆஸி அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக முன்னாள் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரரான கிராம் ஹிக் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் நவம்பர் மாதம் தென்னாபிரிக்கா அணியுடனான தொடரிலிருந்து தனது பணியை ஆரம்பிக்கவுள்ளதாக ஆஸி கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இவர் தென்னாபிரிக்கா போட்டியிலிருந்து தனது பணியை முன்னெடுத்தாலும், அடுத்த வருடம் இந்தியவுடன் இடம்பெறவுள்ள 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு வீரர்களை தயார்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
காரணம் இலங்கையுடனான டெஸ்ட் போட்டியின் தோல்வியுடன் கடந்த 9 டெஸ்ட் போட்டிகளில் ஆஸி அணி தோல்வியடைந்துள்ளது. ஆசிய நாடுகளில் இடம்பெறும் போட்டிகளில் ஆஸி அணியால் சுழல் பந்துக்கு முகம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற குறைகளை கிராம் ஹிக் நிவர்த்தி செய்வார் என ஆஸி கிரிக்கெட் சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Related posts:
|
|