அவுஸ்திரேலியா கிரிக்கட் நிறுவனத்தின் புதிய ஒப்பந்தம்!

Friday, April 13th, 2018

2019ம் ஆண்டுக்கான உலகக் கிண்ண தொடரினை முன்னிட்டு அவுஸ்திரேலிய கிரிக்கட் நிறுவனம், அணி வீரர்கள் தொடர்பான ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளது.

இதன்படி குறித்த உலகக் கிண்ண தொடரை இலக்கு வைத்து 20 வீரர்களை உள்வாங்கிய புதிய ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

பந்தினை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் தடைவிதிக்கப்பட்டுள்ள டேவிட் வோர்னர், ஸ்டீவன் சுமித் மற்றும் கமரன் பென்க்ராஃப்ட் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் இணைக்கப்படவில்லை.

இந்த 20 வீரர்களில் அலெக்ஸ் கரேயஸோன், மார்ஸ் திம், பெயினஜே ரிட்சட்சன், கேன் ரிட்சட்சன், மார்கஸ் ஸ்டோனிஸ், அன்று டை ஆகியோர் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஜெக்ஸன் பேர்ட், ஹில்டன் கார்ட்ரைட, ஜேம்ஸ் பெட்டின்சன, அடம் சம்பா, மெத்தீவ் வாட் ஆகியோரும், ஏற்கனவே இருந்த 20 பேர் கொண்ட குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Related posts: