அவுஸ்திரேலியாவை வெற்றிகொண்டது  தென் ஆபிரிக்கா!

Monday, November 5th, 2018

பெர்த்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது.

அவுஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெர்த் நகரில் இன்று நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி 8 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின் களமிறங்கிய கிறிஸ் லைன் 15 ஓட்டங்களிலும், மேக்ஸ்வெல் 11 ஓட்டங்களிலும் அவுட் ஆகினர்.

தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் அவுஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை இழந்தது.

இறுதியில் அந்த அணி 38.1 ஓவர்களில் 152 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கால்டர் நைல் 34 ஓட்டங்களும், அலெக்ஸ் கேரி 33 ஓட்டங்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் பிலுவாக்யோ 3 விக்கெட்டுகளையும், ஸ்டெயின், நிகிடி, தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதன் பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 29.2 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டிகாக் 47 ஓட்டங்களும், ஹென்ரிக்ஸ் 44 ஓட்டங்களும் எடுத்தனர்.

Related posts: