அவுஸ்திரேலியாவை வீழ்த்திய பிரான்ஸ்!

Sunday, June 17th, 2018

உலகக் கிண்ண கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கணக்கில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது.

2018 உலகக் கிண்ண கால்பந்து தொடரில் ’சி’ பிரிவில் உள்ள பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா அணிகள்  மோதின.தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தில் ஈடுபட்டனர். அதன் மூலம் இரு அணிகளுக்கும் பல முறை ப்ரீ-கிக் வாய்ப்புகள் கிடைத்தன.

ஆனால் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. இந்நிலையில் பிரான்ஸ் வீரர் கிரீஸ்மன்னிற்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்திக் கொண்ட அவர் ஆட்டத்தின் 58வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

அதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் அவுஸ்திரேலிய வீரர் ஜெடினாக் பெனால்டி கிக் வாய்ப்பின் மூலம் கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலையானது.

இந்நிலையில் 81வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் போக்பா ஒரு கோல் அடிக்க அதுவே பிரான்ஸின் வெற்றி கோலாக மாறியது. இறுதியில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது.

Related posts: