அவுஸ்திரேலியாவை புரட்டி எடுத்த பங்களாதேஷ்!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை வென்று பங்களாதேஷ் அணி வரலாற்று சாதனைப் படைத்துள்ளது.
பங்களாதேஷ் வந்துள்ள அவுஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை வென்று பங்களாதேஷ் அணி வரலாற்று சாதனைப் படைத்துள்ளது.
இது அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பங்களாதேஷ் அணி பெறும் முதல் டெஸ்ட் வெற்றியாகும்.டாக்காவில் நடைப்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 260 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.தமிம் இக்பால் 71, சகிப் அல் ஹசன் 84 ஓட்டங்களை குவித்தனர்.தொடர்ந்து விளையாடிய அவுஸ்திரேலிய அணி, 217 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது. சகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.தொடர்ந்து 2ஆவது இன்னிங்ஸ் விளையாடிய பங்களாதேஷ் 248 ஓட்டங்களில் முன்னிலை பெற்றது.2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி சார்ப்பில் வோர்னர் மட்டும் 112 ஓட்டங்களை எடுத்தார்.ஸ்மித் 37, கும்மிஸ் 33 ஓட்டங்களை எடுத்தனர் மற்ற வீரர்கள் சொதப்பியதால் 244 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் வரலாறு வெற்றி பெற்றது.சகிப் அல் ஹசன் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு இன்னிங்ஸிலும் ஐந்து, ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்
Related posts:
|
|