அவுஸ்திரேலியாவை பந்தாடிய இங்கிலாந்து !

Friday, June 22nd, 2018

 

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் 500 ஓட்டங்களை கடப்போம் என்று நினைத்ததாக இங்கிலாந்து அணியின் தலைவர் மோர்கன் கூறியுள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி அங்கு 5 ஒருநாள் போட்டிஇ ஒரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையே நடந்த முதலிரண்டு போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டி நாட்டிங்கம்மில் நடைபெற்றது.

அப்போட்டியில் இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 481 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தது.

அடுத்து ஆடிய அவுஸ்திரேலியா அணி 37 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 239 ஓட்டங்கள் எடுத்து 242 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இப்போட்டியின் முடிவுக்கு பின் பேசிய இங்கிலாந்து அணியின் தலைவர் மோர்கன்இ இங்கிலாந்து அணி வீரர்களுக்கு அந்த வானமே எல்லை. எப்படியும் 500 ஓட்டங்களை கடந்துவிடுவோம் என நினைத்தேன். ஆனால் அது தற்போது முடியாமல் போனது.

தங்கள் அணி வீரர்களின் ஆட்டம் சூறாவளி மாதிரி இருந்தது. இதே ஆட்டம் தொடர்ந்தால்இ 500 ஓட்டங்கள் எட்டும் நாள் தூரத்தில் இல்லை என்று கூறியுள்ளார்

Related posts: