அவுஸ்திரேலியாவை தோற்கடித்தது தென் ஆப்பிரிக்கா

Saturday, March 5th, 2016

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டி நேற்று டர்பனில் நடந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

இதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி வீரர்கள் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்கள் எடுத்தனர்.

158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட வந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு டிவில்லியர்ஸ் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமலும், குயிண்டன் 7 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

பொறுப்பாக விளையாடிய அணித்தலைவர் டுபிளசி 40 ஓட்டங்கள் எடுத்தார், டுமினி(5), ரூசோவ் (19) ஓட்டங்களில் ஆட்டமிழக்கவே, அடுத்து வந்த மில்லர் அரைசதம் கடந்தார்.

தொடர்ந்து 7 விக்கெட் இழப்புக்கு 19.2 ஓவரில் 158 ஓட்டங்கள் எடுத்து, மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது

Related posts: