அவுஸ்திரேலியாவுக்கு எதிராக துடுப்பெடுத்தாடும் இலங்கை!
Friday, September 9th, 2016
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் டி20 போட்டியில் சாதனை ஓட்டங்களுடன் வெற்றியை பதிவு செய்த அவுஸ்திரேலியா தொடரில் 1-0 என முன்னிலையில் இருக்கிறது.
இந்த நிலையில் 2வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று கொழும்பில் நடந்து வருகிறது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் சந்திமால் முதலில் துடுப்பெடுத்தாட முடிவெடுத்தார். அதன்படி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி தற்போது 15 ஓவர்களில் 7 இலங்குகளை இழந்து 94 ஓட்டங்களைப்பெற்று தடுமாறி வருகின்றது. இன்று தனது இறுதி சர்வதேச கிரிக்கெற் போட்டியில் விளையாடும் தில்ஷான் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|