அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியே எனது கடைசி போட்டி- அப்ரிடி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் சாகித் அப்ரிடி இந்த டி20 உலகக்கிண்ணப் போட்டியோடு கிரிக்கெட்டில் இருந்து விடைபெறவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 22 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. அப்போது பாகிஸ்தான் அணியின் தலைவர் அப்ரிடி மைதானத்தில் கலங்கியப்படி அமர்ந்திருந்தார்.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்தப் போட்டி தனது கடைசி போட்டியாக இருக்கும் என்று சாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார். இந்த தோல்வி குறித்து அவர் கூறுகையில்-
பந்துவீச்சாளர்கள் மிடில் ஓவர்களில் நன்றாக செயல்பட்டனர். முதல் 6 ஓவரில் நாங்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடினோம். ஆனால் அதன் பிறகு நல்ல ஓட்டங்களை எடுக்க முடியவில்லை.நாங்கள் இதில் எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் முடியாமல் போய் விட்டது. நாங்கள் ஒரே தவறுகளை தான் அடிக்கடி செய்து கொண்டிருக்கிறோம்.
இது அனைத்துப் போட்டிகளிலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த தோல்வியை மறந்துவிட்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Related posts:
|
|