அவுஸ்திரேலியாவுக்கு இலகு வெற்றி!

Wednesday, June 8th, 2022

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதலாவது போட்டி ஆர்.ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற அவஸ்திரேலியா முதலில் இலங்கையை துடுப்பாட அழைத்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவதற்குள் இலங்கை அணி 19 ஓவர்களில் 128 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

129 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய அவுஸ்திரேலிய அணி எந்த அழுத்தமும் இன்றி ஒரு விக்கெட் கூட இழக்காமல் 134 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை கடந்தது.

அவ்வணி சார்பில் ஆரோன் பின்ச் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: