அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி: கிண்ணத்தை வென்றது நியூசிலாந்து!
Monday, February 6th, 2017நியூசிலாந்து-அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
Hamilton மைதானத்தில் நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
அதன் படி களமிறங்கி விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 281 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக நியூசிலாந்து வீரர் டெய்லர் சதம் அடித்து அணியின் ஓட்டக்குவிப்புக்கு உறுதுணையாக இருந்தார்.
அவுஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், பில்க்னெர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
282 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடிய அவுஸ்திரேலிய அணி 47 ஓவர்களில் 257 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
அவுஸ்திரேலிய தரப்பில் ஆரோன் பிஞ்ச் 56 ஓட்டங்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் போல்ட் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். ஆட்ட நாயகனாக போல்ட் தெரிவு செய்யப்பட்டார்.இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
Related posts:
|
|