அவுஸ்திரேலியாவில் அதிரடிகாட்டும் திசர பெரேரா !

Saturday, January 21st, 2017

அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் பிக் பேஸ் லீக் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வீரர் திசர பெரேராவை இலங்கை புறக்கனிப்பது ஏன் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் பிக் பேஸ் லீக் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வீரர் திசர பெரேரா சிறப்பாக விளையாடி வருகின்றார்.

நேற்று இடம்பெற்ற பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வீரர் திசர பெரேரா 4 ஓவர்கள் பந்துவீசி 24 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுடனான டி20 போட்டியில் திசர பெரேரா இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.எடிலைட் ஸ்ட்ரைகர் அணிக்கு எதிரான போட்டியில் திசர பெரேரா 4 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

மெல்போர்ன் ரெனேகேட்ஸ் பிரிஸ்பேன் ஹீட் அணிகளுக்கிடையிலான போட்டியில் மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணி 1 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.முதலில் துடுப்பாடிய மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 199 ஓட்டங்களை பெற்று கொண்டது.பதிலுக்கு துடுப்பாடிய பிரிஸ்பேன் ஹீட் அணி, 19.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளை இழந்து 198 ஓட்டங்களை பெற்றது.

625.167.560.350.160.300.053.800.300.160.90

Related posts: