அவுஸ்திரேலியாவின் மூன்று வீரர்களின் தடை குறைக்கப்படுமா? 

Wednesday, November 21st, 2018

பந்தின் தன்மையை மாற்றி அமைத்தமைக்காக அவுஸ்திரேலியாவின் மூன்று கிரிக்கட் வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்டீவ் சுமித், டேவிட் வோர்னர் ஆகியோருக்கு 12 மாதங்களுக்கான தடையும் கெமரன் பென்க்ராஃப்ட்டுக்கு 9 மாத தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற தென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியொன்றில் வைத்து பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்தமை உறுதியானதை அடுத்து, இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனை தொடர்பில் சுயாதீன குழு ஒன்று மீளாய்வு செய்து அறிக்கைப்படுத்தியுள்ளது.

இதன்படி இந்த வார இறுதியில் குறித்த மூன்று கிரிக்கட் வீரர்களது தடையையும் நீக்குவதற்கு அல்லது குறைப்பதற்கான தீர்மானத்தை அவுஸ்திரேலியா கிரிக்கட் மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Related posts: