அவுஸ்திரேலியாவின் தலைவரானார் பிஞ்ச்!

அவுஸ்திரேலியாவுக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இதன் முதல் போட்டி பெப்ரவரி 17ம் திகதி மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது.
அதே சமயம் அவுஸ்திரேலியா அணி இந்தியா வந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் புனேயில் 21ம் திகதி தொடங்குகிறது.
இதனால் இரண்டாம் நிலை வீரர்களை கொண்ட அணிதான் இலங்கைக்கு எதிராக விளையாட இருக்கிறது.
இந்த காரணத்தால் தற்போது அந்த அணியை தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் வழிநடத்துவார் என்று அவுஸ்திரேலிய தெரிவித்துள்ளது.
தற்போது தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
Related posts:
தரங்க சதம்: போராடி தோற்றது இலங்கை அணி!
கொழும்பில் ஆரம்பமானது சர்வதேச வலைப்பந்தாட்டப் போட்டி!
இந்தியன் ப்ரீமியர் லீக் - சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை வென்று Play Off சுற்றில் விளையாடும் தகுதியை ...
|
|