அலி, ஸ்டோக்ஸ் சதம்: முன்னிலையில் இங்கிலாந்து!

Friday, November 11th, 2016

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் இரண்டாம் நாள் முடிவில், இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. ராஜ்கொட்டில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில் 4 விக்கெட்டுகளை இழந்து 311 ஓட்டங்களுடன் இன்றைய நாளை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 537 ஓட்டங்களைப் பெற்றது.

ஆட்டமிழக்காமல் 99 ஓட்டங்களுடன் இன்றைய நாளை ஆரம்பித்த மொய்ன் அலி, தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். துடுப்பாட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் 128 (4ஆவது சதம்), ஜோ றூட் 124 (11ஆவது சதம்), மொய்ன் அலி 117 (4ஆவது சதம்), ஜோனி பெயர்ஸ்டோ 46, ஸபார் அன்சாரி 32 ஓட்டங்களைப் பெற்றர். பந்துவீச்சில் இரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் மொஹமட் ஷமி, உமேஷ் யாதவ், இரவிச்சந்திரன் அஷ்வின் மூவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

தனது முதலாவது இனிங்ஸை இன்று ஆரம்பித்த இந்திய அணி, நிதானமான ஆரம்ப இணைப்பாட்டத்தைப் பெற்றுக் கொண்டது. நேற்றைய நாள் முடிவில் அவ்வணி, விக்கெட் இழப்பின்றி 63 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் கௌதம் கம்பீர், முரளி விஜய் இருவரும் முறையே 28, 25 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் களத்தில் காணப்படுகின்றனர்.

InStokes_10112016_GPI

Related posts: