அரையிறுதியில் ஜோக்கோவிச்!

Thursday, September 8th, 2016

ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு, உலகின் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், 2ஆம் நிலை வீராங்கனையான ஜேர்மனியின் அங்கெலிக் கேர்பர் ஆகியோர், அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றனர்.

10ஆம் நிலை வீரரான பிரான்ஸின் ஜோ-வில்பிரட் சொங்காவை எதிர்கொண்ட ஜோக்கோவிச், 6-3, 6-2 என்ற செட் கணக்கில் முன்னிலை வகித்த போது, காயம் காரணமாக சொங்கா, போட்டியிலிருந்து வெளியேறினார். இதனால், ஜோக்கோவிச்சுக்கு வெற்றி கிடைத்தது.

8ஆம் நிலை வீராங்கனையான இத்தாலியின் றொபேர்ட்டா வின்சியை எதிர்கொண்ட கேர்பர், 7-5, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

ஏனையோரில், சுவிற்ஸர்லாந்தின் கரோலின் வொஸ்னியாக்கி, ஆண்களில் பிரான்ஸின் காயெல் மொன்பில்ஸ் ஆகியோரும் அரையிறுதிகளுக்குத் தகுதிபெற்றனர்.

novak

Related posts: