அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்!

Saturday, July 7th, 2018

உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் இரண்டாவது காலிறுதிப் போட்டியில் பிரேசில் மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின.
இதில் பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புடன் ஆடிய பெல்ஜியம் அணி முதல் பாதியில் 2 கோல்கள் அடித்தது. பிரேசில் அணி கோல் அடிக்கவில்லை இதனால் பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இரண்டாவது பாதியில் பிரேசில் அணி வீரர்களுக்கு கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தும் அந்த வாய்ப்பை கோலாக மாற்றமுடியாமல் 1 கோல் மட்டுமே அடித்தனர்.
இதனால் இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஜூலை 10 நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.

Related posts: