அரையிறுதிக்கு தகுதி பெற்றார் செரீனா வில்லியம்ஸ்!

Thursday, September 6th, 2018

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

கிரேண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி நியூயோர்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன

இதில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை எதிர்கொண்டார்.

இதில் செரீனா வில்லியம்ஸ் 6: 4, 6:3 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தெரிவானார்.