அரவிந்தவுக்கு அழைப்பு!

D3S6560x-780x520 Tuesday, September 12th, 2017

இலங்கை கிரிக்கட் அணி தற்போது பெற்றுவரும் தொடர் தோல்வியை நிறுவத்துவதற்காக இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான அரவிந்தடி சில்வாவின் உதவியை பெறுவதற்கு சிறிலங்கா கிரிக்கட் நிறுவனம் அவதானம் செலுத்தியுள்ளதாக கிரிக்கட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி அரவிந்தடி சில்வா சர்வதேச கிரிக்கட் பிரதானியாக நியமிப்பதற்கு சிறிலங்கா கிரிக்கட் நிறுவனம் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அரவிந்தடி சில்வாவிற்கு மேலதிகமாக பிரண்டன் குறுப்பு, கிரகம் லேபோய், மஹேல ஜயவர்தன ஆகியவர்களின் உதவிகளையும் இதற்காக பெற்றுகொள்ள ஆயத்தமாவமதாக கிரிக்கட் தகவல்கள் தெரிவிக்கின்றன.பொதுவாக கிரிக்கட் நிர்வாகம் தொடர்பில் தற்போது அழைப்பொன்று கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாகவும் அரவிந்தடி சில்வா தெரிவித்துள்ளார்.எமது செய்தி பிரிவு தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இதற்கு முன்னரும் அரவிந்தடி சில்வா பல முறை சிறிலங்கா கிரிக்கட் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!