அயர்லாந்தை புரட்டி எடுத்தது அவுஸ்திரேலியா!

அவுஸ்திரேலிய அணிக்கும் அயர்லாந்து அணிக்குமிடையிலான ஒற்றை ஒருநாள் சர்வதேசப் போட்டியில், மிகச்சிறப்பான திறமையை வெளிப்படுத்திய அவுஸ்திரேலிய அணி, மிக இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொண்டது.
தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த அயர்லாந்து அணி, 43.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றது. முதலாவது விக்கெட்டுக்காக 47 ஓட்டங்களைப் பகிர்ந்த அவ்வணி, ஒரு கட்டத்தில் 23.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்களை இழந்து காணப்பட்டது. ஆனால், அதன் பின்னர் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
துடுப்பாட்டத்தில் ஜோன் அன்டர்சன் 39 (49), போல் ஸ்டேர்லிங் 30 (27), வில்லியம் போர்ட்டபீல்ட் 24 (39), கெவின் ஓ பிரையன் 23 (34) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் அடம் ஸாம்பா 3, ஸ்கொட் போலன்ட் 2, ஜோன் ஹேஸ்டிங்ஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
199 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 30.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து, வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் உஸ்மான் கவாஜா ஆட்டமிழக்காமல் 82 (77), ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 59 (74), டேவிட் வோணர் 48 (30) ஓட்டங்களைப் பெற்றனர். இப்போட்டியின் நாயகனாக, உஸ்மான் கவாஜா தெரிவானார்.
Related posts:
|
|