அயர்லாந்துடனான ஒருநாள் போட்டியில் தென் ஆபிரிக்க வெற்றி!

Monday, September 26th, 2016

அயர்லாந்து மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒரேயொரு ஒருநாள் போட்டி நிறைவுக்கு வந்துள்ளது.

போட்டியில் 206 ஓட்டங்களால் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.அறிமுகப் போட்டியிலேயே தென் ஆபிரிக்காவின் கறுப்பின ஆரம்ப வீரர் பவுமா சதமடிக்க தென் ஆபிரிக்க அணி முதலில் துடுப்பாடி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 354 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு 355 எனும் இலக்குடன் களம் புகுந்த அயர்லாந்து, 30.5 ஓவர்களில் 148 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து 206 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் அரைச்சதமடித்த டுமினி பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை கைபற்றினார்.

South-Afffrica-720x480

Related posts: