அயர்லாந்துடனான ஒருநாள் போட்டியில் டி வில்லியர்ஸ் இல்லை!

Saturday, September 24th, 2016

அயர்லாந்து அணியுடனான ஒருநாள் போட்டியில் தென் ஆபிரிக்க அணித்தலைவர் ஏ.பி டிவில்லியர்ஸ் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற நியூஸிலாந்து அணியுடனான கிரிக்கட் தொடரின் போது டிவில்லியஸிற்கு ஏற்பட்ட காயம் இதுவரை குணமடையாத நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள அயர்லாந்து அணியுடனான ஒருநாள் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய அணியுடனான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரிலும் டி வில்லியர்ஸ் விளையாடுவது சந்தேகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அயர்லாந்துடனான போட்டியில் தென் ஆபிரிக்க அணியின் தலைவராக பிளஸிஸ் செயற்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 09col8123501441_4796567_23092016_aff_cmy

Related posts: