அமேசான் வாரியர்ஸ் அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி!

Friday, August 5th, 2016

மேற்கிந்திய தீவில் நடைபெற்ற முதல் பிளே ஆப் போட்டியில் கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு முன்னேறியது அமேசான் வாரியர்ஸ் அணி.

மேற்கிந்திய தீவில் CPL போட்டிகள் நடைபெற்று வருகின்றன, இதில் பிளே ஆப் சுற்றுக்கு நான்கு அணிகள் தகுதி பெற்றன.இதில் முதல் பிளே ஆப் சுற்றில் அமேசான் வாரியர்ஸ், ஜமைக்கா டல்லவாஸ் அணிகள் மோதின.

இதில் ஜமைக்கா டல்லவாஸ் அணி முதலில் துடுப்பெடுத்து ஆடியது. அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக கெய்ல், வால்டன் இறங்கினர்.துவக்கத்தில் இருந்தே இருவரும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வால்டன் 13 பந்தில் 16 ஓட்டங்களும், கெய்ல் 36 பந்தில் 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து அணியின் பண்முக ஆட்டக்காரர்களான ரசுல்(10), ஷாகிப்அல்ஹசன்(11), பாவல்(23) ஓட்டங்கள் எடுத்து ஏமாற்றினர்.அடுத்து களமிறங்கிய வீரர்கள், அடுத்தடுத்து ஆட்டமிழந்து, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 146 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தனர்.

அணியில் அதிகபட்சமாக கெயில் 33, சங்ககாரா 20 ஓட்டங்கள் எடுத்தனர்.அமேசான் அணி சார்பில் எம்ரிட் 3 விக்கெட்டும், தன்வீர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.அடுத்து துடுப்பெடுத்து ஆடிய அமேசான் வாரியர்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் சிமித்(16), மாடின்சன்(14) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதற்கு பின்னர் வந்த மொஹமத்(13), பர்னல்(4) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் அந்த அணி 14.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 92 ஓட்டங்கள் எடுத்து பரிதவித்தது.இடது கை துடுப்பாட்டக்காரரான சோகைல்தன்வீர் மற்றும் கிரிஸ்லின் ஆட்டத்தை சீராக கொண்டு சென்றனர்.

கடைசியில் 22 பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு அமேசான் வாரியர்ஸ் அணி தள்ளப்பட்டது. வெற்றி உறுதி என்ற எண்ணத்தில் இருந்த ஜமைக்கா அணியினருக்கு சோகைல் அதிர்ச்சி தந்தார்.

18 வது ஓவரை வீசிய பாவல் பந்து வீச்சீல் சோகைல் சிக்ஸர் அடிக்க ஆட்டம் சூடு பிடித்தது.மேலும் 18 வது ஒவரில் மட்டும் அமேசான் வாரியர்ஸ் அணி 17 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் அமேசான் வாரியர்ஸ் அணி பக்கம் திரும்பியது.

கடைசி இரண்டு ஓவர்களில் 13 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இது எளிதாக எடுத்த அமேசான் வாரியர்ஸ் அணி 19.4 பந்துகளில் 150 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு முன்னேறியது.அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவிய சோகைல் தன்வீர் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

Related posts: