அமேசன் வொரியர்ஸ் வெற்றி!

Wednesday, July 13th, 2016

கரிபியன் பிரிமியர் லீக் தொடரின்    லூசியா சோக்ஸ் அணிக்கெதிரான போட்டியில் கயானா அமேசன் வொரியர்ஸ் அணி  8 விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய லூசியா சோக்ஸ்   அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 138 ஓட்டங்களை பெற்றக்கொண்டது.

லூசியா சோக்ஸ்  அணி சார்பில் மைக்கல் ஹசி அதிகபட்சமாக 64 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.பந்துவீச்சில் சாம்பா எம்ரிட் மற்றும் தன்வீர் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

139 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய வொரியர்ஸ் அணி  17.2 ஓவர்களில்  2 விக்கட்டுகளை இழந்து 139 ஓட்டங்களை பெற்று வெற்றிப்பெற்றது.இதில் மொஹமட்  29 பந்துகளில் 43 ஒட்டங்களையும், கிரிஸ் லைன் 38 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் டேவிட் மற்றும் செல்லிங்போர்ட் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.போட்டியின் ஆட்டநாயகனாக மொஹமட் தெரிவு செய்யப்பட்டார்.

Related posts: