அமெரிக்க நீச்சல் அணி உலகசாதனை!

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றுவரும் உலக சம்பியன்ஷிப் நீச்சல் தொடரில், அமெரிக்க நீச்சல் அணி, 4X100 மீட்டர் கலப்பு மெட்லி நீச்சல் போட்டியில் உலகசாதனை படைத்துள்ளது.
ஆண்களுக்கான கலப்பு மெட்லி பிரிவில் அமெரிக்காவின் ரியான் மர்பி, கெவின் கார்டஸ், கெல்சி வோரல் மற்றும் மல்லோய் கோமர்போர்ட் ஆகியோர் கொண்ட அணி 4X100 மீட்டர் பந்தயத்தில் பங்கேற்றது.
இதில் இந்த அணி பந்தய தூரத்தை 3 நிமிடங்கள், 40.28 வினாடிகளில் கடந்து முதலிடத்தைப் பிடித்து உலகசாதனையை பதிவுசெய்தது.
இதற்கு முன்பு 2015ஆம் ஆண்டு பிரித்தானிய அணி, ரஷ்யாவில் நடைபெற்ற போட்டியில் 3 நிமிடம் 41.71 வினாடிகளில் கடந்ததே உலக சாதனையாக பதிவுசெய்யப்பட்டிருந்தது. தற்போது அதனை அமெரிக்க அணி முறியடித்துள்ளது.உலக சம்பியன்ஷிப் போட்டியில் கலப்பு மெட்லி போட்டி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் சேர்க்கப்பட்டது. அத்தோடு 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் இப்போட்டி இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|