அமெரிக்காவை வீழ்த்தியது இந்திய அணி – 3 ஆவது அணியாக சூப்பர் 8 சுற்றுக்கும் சென்றது!

Thursday, June 13th, 2024

T20 கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ICC T20 கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் நேற்றைய (12) லீக் ஆட்டத்தில் இந்தியா ௲ அமெரிக்கா அணிகள் மோதின. நியூயோர்க்கில் உள்ள நசாவ் கவுண்டி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச்சுழற்சியை வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய அமெரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஷயான் ஜஹாங்கீர் மற்றும் ஸ்டீவன் டெய்லர் இறங்கினர். இதில் அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் பந்திலேயே ஷயான் ஜஹாங்கீர் ஆட்டமிளந்ததால் அமெரிக்க அணி ஆடிப் போனது.

இதனையடுத்து ஆடுகளம் வந்த ஆண்ட்ரீஸ் கவுஸ், அதே ஓவரின் ஆறாவது பந்தில் ஹர்திக் பாண்டியாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிளந்தார்.. இப்படியாக முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணிக்கு நம்பிக்கை ஊட்டினார் அர்ஷ்தீப் சிங் .

அடுத்து இறங்கிய அணியின் தலைவர் ஆரோன் ஜேம்ஸ் 22 ஓட்டங்களில் ஹர்திக் பாண்டியாவின் பந்துவிச்சில் ஆட்டமிழந்தார்.. தொடர்ந்து ஸ்டீவன் டெய்லர் 24 ஓட்டங்கள், நிதிஷ் குமார் 27 ஓட்டங்கள், கோரி ஆண்டர்சன் 15 ஓட்டங்கள், ஹர்மீத் சிங் 10 ஓட்டங்கள், ஷேட்லி வான் ஷால்விக் 11 ஓட்டங்கள் என 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்களில் அமெரிக்க அணி சுருண்டது.

இதனையடுத்து 111 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இறங்கினர். இதில் விராட் கோலி இரண்டாவது பந்திலேயே ஒரு ஓட்டம் கூட எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். ரோஹித் சர்மா 2 ஆவது ஓவரில் வெறும் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய ரிஷப் பந்த் 18 ஓட்டங்கள் கொடுத்து வெளியேறினார். முக்கிய வீரர்களின் மோசமான ஆட்டத்தால் துவண்டு போயிருந்த இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் துபே இருவரும் நிதானமாக ஆடி புத்துயிர் கொடுத்தனர்.

சூர்யகுமார் அரை சதம், துபே 31 ஓட்டங்கள் என 18.2 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அமெரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி நடப்பு T 20 உலகக் கிண்ணத் தொடரில் தனது ஹெட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளதுடன் அடுத்த சுற்றுக்கும் தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: