அப்ரிடி அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Tuesday, June 5th, 2018

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷகிட் அப்ரிடி, இனிமேல் எக்காரணம் கொண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டேன் எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ~கிட் அப்ரிடி சமீபத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் – உலக லெவன் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் அப்ரிடி உலக லெவன் அணியின் தலைவராக செயற்பட்டார். இதில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்தப் போட்டியே தனது கடைசி சர்வதேசப் போட்;டி என அறிவித்துள்ள ~கிட் அப்ரிடி, இனிமேல் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்தார்.

இதற்கு முன் பாகிஸ்தான் அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக ஐந்து முறை அப்ரிடி அறிவித்துள்ளார். இருப்பினும் மீண்டும் தனது முடிவை மாற்றி விளையாட வந்துள்ளார். எனினும் இம்முறை சர்வதேசப் போட்டிகளில் இனிமேல் விளையாடப் போவதில்லை என்று அவர் தற்போது உருக்கமாகத் தெரிவித்துள்ளமை கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் சர்வதேச போட்டிகளில் நான் பங்கேற்கும் கடைசி போட்டி மேற்கிந்திய தீவுகள் – உலக லெவன் அணிகளுக்கு இடையிலான போட்டியாகத்தான் இருக்கும்.

அதிகமான வயது, காயத்தால் இனி என்னால் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்த முடியாது. எனவே இனிமேல் நான் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வுபெறவுள்ளேன.

கிரிக்கெட்டின் தாயகம் என அழைக்கப்படும் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் கடைசிப் போட்டியை விளையாடியமை எனக்குப் பெருமையாக இருக்கிறது. இந்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது எனத் தெரிவித்தார்.

மேற்கிந்தியத் தீவுகள் – உலக லெவன் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது அப்ரிடிக்கு அனைத்து வீரர்களும் பிரியாவிடை கொடுத்து மரியாதையும் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: