அப்ரிடிக்கு வாழ்த்துச் சொன்ன ஜெயசூர்யா
Saturday, February 25th, 2017
பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரான அப்ரிடி அண்மையில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாகவும், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு லீக் போட்டிகளில் மட்டும் விளையாடப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனால் அப்ரிடிக்கு உலகின் முன்னணி வீரர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் பலர் அப்ரிடியின் கிரிக்கெட் பயணத்திற்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக வலம்வந்த ஜெயசூர்யா அப்ரிடிக்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். அதில் உங்களுடைய எதிர்காலம் நன்றாக அமைவதற்கு வாழ்த்துக்கள், பலபோட்டிகளை நீங்கள் உங்கள் திறமையால்மாற்றி உள்ளீர்கள் என்று கூறியிருந்தார். இதற்கு அப்ரிடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நன்றி என்றும் தான் ஒருவன் மட்டுமே எப்படி ஆரம்பித்தேனோ அதே போன்று தன்னுடைய ஆட்டத்தை நிறைவு செய்துள்ளேன் என்று வித்தியாசமாக கூறியுள்ளார்.
Related posts:
|
|