அப்ரிடிக்கு நன்கொடையாக வழங்கிய கோஹ்லி!
Friday, August 4th, 2017பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கட் வீரர் ஷாகித் அப்ரிடியின் தொண்டு நிறுவனத்துக்கு இந்திய கிரிக்கட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தனது மட்டை ஒன்றினை பரிசளித்திருக்கிறார்.அண்மையில், அப்ரிடியின் தொண்டு நிறுவனத்திற்கா இந்திய கிரிக்கட் வீரர்கள் கையெழுத்திட்ட கோஹ்லியின் ஜெர்ஸி ஒன்று பரிசளிக்கப்பட்டது.அந்த ஜெர்ஸி லண்டனில் ஏலம் விடப்பட்டு, ரூ.3 லட்சத்துக்கு விலை போனது.
இப்படி சட்டையைக் கழற்றிக்கொடுத்த கோஹ்லி தன் மட்டையையும் இப்போது வாரி வழங்கியுள்ளார்.இந்த முறை தன் மட்டையைக் கொடுத்த விராட் கோஹ்லி ஷாகித் அப்ரிடி நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவு ஒற்றை வெளியிட்டார். “உங்களைப் போல நண்பர்களும் ஆதரவாளர்களும் அளிக்கும் உதவியுடன் தொண்டு நிறுவனத்தின் பணி எல்லோருக்கும் பயன்படும்” என்று அப்ரிடி தெரிவித்துள்ளார்.விராட் கோஹ்லி பரிசாக கொடுத்திருக்கும் மட்டையில் கோஹ்லியின் கையெழுத்தும் உள்ளது.அந்த மட்டையின் புகைப்படத்தையும் அப்ரிடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.இந்தப் பதிவைப் பார்த்த கோஹ்லி, அப்ரிடி தொண்டு நிறுவனத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|